ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து

ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து

பைல் படம் 

நிா்வாகக் காரணங்களால் ராமநாதபுரம் - செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது (07695) ஜனவரி 31 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயிலானது (07696) வரும் 26, பிப். 2 ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பகுதியாக ரத்து : விழுப்புரம் - திருப்பதி - விழுப்புரம் முன்பதிவற்ற விரைவு ரயில்களானது (16854, 16853) வரும் 29 ஆம் தேதி, பிப். 3 ஆம் தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நேர மாற்றம்: மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயிலானது (16231) வரும் 27, பிப். 3 ஆம் தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து 60 நிமிஷங்கள் தாமதமாக மாலை 6.55 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story