கோவை மாநகராட்சியின் புதிய மேயர் திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் புதிய மேயர் திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு

ரங்கநாயகி 

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் ரங்கநாயகி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கு ஏற்கெனவே மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களுக்கு மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் பொறுப்பேற்றது முதலே பல புகார்கள் வந்தன. மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. திமுக கவுன்சிலர்களும் அவ்வப்போது கல்பனாவுக்கு எதிர்ப்பை காட்டினர். மேலும் நிர்வாகத்தில் கணவரின் தலையீடு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 29வது வார்டு திமு.க., கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆவார். கோவை எம்.பி., ராஜ்குமாரின் ஆதரவாளர் ஆவார்.


Tags

Next Story