ராணிப்பேட்டை : தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை : தேர்தல் பணி  ஆலோசனை கூட்டம்

வாக்கு பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கம் 

ராணிப்பேட்டையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் 2-கட்டங்களாக நடைபெற்ற முகாமில் மொத்தம் 28 ஆயிரத்து 321 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கையில் உள்ளது. மேலும், விண்ணப்பங்களுக்காக நிர்ணயம் செய்த காலக்கெடுவுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் உண்மை தன்மை உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வாலாஜா, ஆற்காடு பகுதிகளில் விண்ணப்பம் அளித்தவர்களின் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story