ராணிப்பேட்டை: அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

ராணிப்பேட்டை: அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீர்


ராணிப்பேட்டையில் அரசு மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் மீன் சுருட்டைப் பாம்பு பூச்சிகளால் நோயாளிகள் பீதி. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெரும்பச்சை கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து ஏரி போல் காட்சியளிக்கிறது இரவு நேரங்களில் அந்த நீரில் இருந்து மீன் சுருட்டைப் பாம்பு பூச்சிகள் ஆகியவைகள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் படிக்கட்டில் மற்றும் பிரசவ வார்டு படிக்கட்டிலும் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து புறநோயாளிகளும் அந்த நீரில் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் நோய் தொற்றுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகள் அந்த நீரில் நடந்து செல்வதால் மேலும் ஒரு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் ஆகையால் இந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story