ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் விடுவிப்பு குறித்த மறு ஆய்வு
ஓ.பன்னீர்செல்வம் வழக்கை மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என பன்னீர்செல்வம் சகோதரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் வழக்கை மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என பன்னீர்செல்வம் சகோதரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என பன்னீர்செல்வம் சகோதரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் நிறைவடைந்தது. லஞ்ச ஒழிப்பு துறை வாதங்களுக்காக விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும், சாட்சிகளும் மரணமடைந்து விட்டனர் என்றும், நீண்ட கால இடைவெளிக்குப் பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் பன்னீர்செல்வம் சகோதரர் தரப்பு தெரிவித்துள்ளது.
Next Story