அரசியலை விட்டு விலக தயார் - அமைச்சர் மனோ தங்கராஜ்

அரசியலை விட்டு விலக தயார் -  அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆலோசனை கூட்டம் 

ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளம் கொண்டு செல்ல மத்திய அரசின் சட்டம் உள்ளது. அப்படி உரிமையில்லை என பொன் ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், - இங்கு இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் வந்துள்ளனர். இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும். குமரி மாவட்டம் மக்கள் அமோகமாக தங்கள் ஆதரவை தந்துள்ளார்கள். பாரதிய ஜனதா ஊழலுக்கு மேல் ஊழல் செய்துள்ளது. மக்கள் நலனை விட ஊழலில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். தமிழக முதல்வர் நாங்குநேரியில் வைத்து இன்று அனைத்து வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.அதில் தன் எழுச்சியாக நிறைய மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

பொன் ராதாகிருஷ்ணன் இரண்டு முறை அமைச்சர் பதவி இருந்திருக்கிறார். ஆட்சியில் இல்லாத நேரத்தில் ஜூலை போராட்டம் நடத்தி இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித் தருவோம் என்றார். எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளம் கொண்டு செல்ல மத்திய அரசின் சட்டம் உள்ளது. அப்படி உரிமையில்லை என பொன் ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

Tags

Next Story