அதிக கனமழையால் ரெட் அலர்ட்...பள்ளிகளுக்கு விடுமுறை அவசரமாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்!

அதிக கனமழையால் ரெட் அலர்ட்...பள்ளிகளுக்கு விடுமுறை அவசரமாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்!

Red alert 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கூடங்குளம், குற்றாலம் அருவிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக மிக கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என்பதால் நாளை(18-12-2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், ”பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம், நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒங்கிணைப்பதற்காகவும் மூத்த அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story