தென்காசியில் ரெட் அலர்ட் - சுற்றுலா பயணிகளுக்கு 5 நாள் தடை
தென்காசியில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகள், அணைகள், நீர் நிலைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகத்தினால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள அருவிகளிலும் அணைக்கட்டு பகுதிகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்று 5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை மற்றும் அதீத கனமழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வருவதற்கு சாத்தியகூறு இருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது. தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Next Story