ராம நவமி-யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு
ராம நவமியை முன்னிட்டு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராம நவமியை முன்னிட்டு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராம நவமியை முன்னிட்டு தமிழகத்தின் 11 மாவட்டங்கள் வழியாக யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. யாத்திரைக்கு நாங்கள் எதிராக இல்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். கன்னியக்குமாரி மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. கன்னியாக்குமரியில் யாத்திரை செல்ல அனுமதிக்கோரி விண்ணப்பிக்கவும்,அதை பரீசிலித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராம நவமி யாத்திரைக்கு சட்டம் ஒழுங்கை காரணம் கூறி காவல்துறை அனுமதி மறுத்ததாக ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Next Story