இனி கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை! - மின்சார வாரியம்

இனி கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை! - மின்சார வாரியம்

மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை.

750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகளுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை.

14 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டட பரப்பளவுக்கு உட்பட்ட வணிக கட்டடங்களுக்கும் கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை.

அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

Tags

Next Story