தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.83 லட்சம் விடுவிப்பு
மாவட்ட ஆட்சியர்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு, 72 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில், மார்ச்.31 சனிக்கிழமை பறக்கும் படைக் குழு சோதனை செய்தபோது, கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், ரூ.78 ஆயிரத்து 800 மற்றும் ரூ.54 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மேல்முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, மொத்தப் பணம் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரத்து 300 விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.