மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர் இருப்பு 69 டி.எம்.சி,யாக இருந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரி நீரை வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரை திறக்க வேண்டிய தண்ணீர் திறப்பு குடிநீர் மற்றும் மீன் வளத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை குறைந்து போனதால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2 டி.எம்.சி, தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது .இதனை அடுத்து மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags

Next Story