வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ஆகியோர் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் திறந்து வைத்தனர். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 1797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 43,244 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரேணுகா, செயற்பொறியாளர் தமிழ்செல்வன், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story