பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்!

பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்!

அண்ணாமலை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியகியுள்ளனர். இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story