மத துவேச கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மத துவேச கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 

பாரத பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துக்களை தேர்வுகளுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும், பாரத பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல, அரசியல் கட்சித் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் உயர்பதமையில் உள்ளவர்களும் இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கு , மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சி தலைவர்களின் இது போன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மதத் துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும் நாட்டில் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story