தீவிர எதிர்பார்ப்புடன் ரீமால் புயல்!
ரீமால் புயல்
இன்று மாலை வலுப்பெற உள்ள ரீமால் புயல் மற்றும் நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்காளதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும்.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இன்று காலை கிழக்கு மத்திய வங்கக்கடலில் 17.8°N அட்சரேகைக்கு, தீர்க்கரேகை 89.7°E அருகே நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளது. அதன் பின்னர், நாளை(26.05.2024)நாளை நள்ளிரவு நேரத்தில், மணிக்கு 110-120 வேகத்திலும் சமயத்தில் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடுமையான சூறாவளி புயலாக சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.