கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

பைல் படம் 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோவில் செயல்பாட்டை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். கோவிலுக்கு சொந்தமான 4,500 ஏக்கர் நிலத்தில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவில் ஆவணங்களின்படி, வரகுண பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 3, 290 ஏக்கர் நிலங்களே உள்ளதாகவும், 707 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மனுவுக்கு பதிலளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவு அளித்து விசாரணை ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story