மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு
அனல் மின் நிலையம்
சேலம் மாவட்டம், மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையமும், அதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இந்த இரண்டு அனல் மின் நிலையங்களிலும் நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யபட்டு வந்தது. இந்நிலையில் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மொத்த மின் உற்பத்தியான 1,440 மெகாவாட்டிற்கு பதிலாக 840 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story