சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு சுற்றறிக்கை ரத்து - இரு நீதிபதி அமர்வில் உறுதி

சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு சுற்றறிக்கை ரத்து - இரு நீதிபதி அமர்வில் உறுதி

நீதிமன்றம் 

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை தமிழக அரசு மாற்றி அமைத்த சுற்றறிக்கை ரத்து என இரு நீதிபதிகள் அமர்வில் உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து 2023ல் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. சட்ட விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் வரை, 2017ஆம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டு மதிப்பீட்டை அதிகரிக்க 2023-24 ஆம் ஆண்டு முடிவு செய்த தமிழக அரசு தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என சுற்றறிக்கையை எதிர்த்து கிரெடாய் தொடர்ந்த வழக்கில் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு முடித்து வைத்தது.

Tags

Next Story