கழுகு பாதுகாப்பு மையம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்திரவு

கழுகு பாதுகாப்பு மையம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்திரவு

பைல் படம்

ஜூன் 5ஆம் தேதிக்குள் கழுகு பாதுகாப்பு மையம் அமைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அழிந்துவரும் கழுகுகளை பாதுக்காக்கும் வகையில் நான்கு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க கோரி சூர்யகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில் ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. 1980-ல் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story