டிவி சின்னம் ஒதுக்க கோரிக்கை - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நாடாளுமன்ற தேர்தலில் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தாகவும், கடந்த முறை போட்டியிட்ட டிவி சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில் கட்சி துவங்கியதில் இருந்து தனிச்சின்னத்தில் தான் போட்டியிட்டோம். 2019 கூட்டணி சின்னத்தில் போட்டியிட்டோம். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம் கடந்த முறை போட்டியிட்ட டிவி சின்ன ஒதுக்க கோரிக்கை வைத்தோம் உச்சநீதிமன்றம் டிவி சின்ன ஒதுக்கி உள்ளது இதனை தலைமை தேர்தல் ஆணையரிடம் கட்சி வழக்கறிஞர் கொடுத்துள்ளார், தற்போது நானும் உச்ச நீதிமன்ற உத்தரவை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளேன்.. என பேசினார்

Tags

Next Story