செய்துங்கநல்லூரிலிருந்து ரயில்களை இயக்க கோரிக்கை

செய்துங்கநல்லூரிலிருந்து ரயில்களை இயக்க கோரிக்கை

தூத்துக்குடி ரயில் நிலையம் 

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி காரணமாக இன்று முதல் ரத்து செய்யப்படும் திருச்செந்தூர் ரயில்களை செய்துங்கநல்லூரில் இருந்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் திருநெல்வேலி வழியாக செல்கின்ற ரயில்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி திருநெல்வேலியில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06673 வருகிற 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 9 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. காலை 10:10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06675 ரயில் 11ஆம் தேதி மற்றும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆகிய 8 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. காலை 11.05 க்கு வாஞ்சி மணியாச்சியில் புறப்படும் வண்டி எண் 06679 ரயிலானது 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை 10 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து மாலை 6:50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06677 ரயில் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் வண்டி எண். 6409 ரயிலானது 11ம் தேதியிலிருந்து 14ம் தேதி வரை 4 நாட்கள் 40 நிமிடம் தாமதமாக மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. மேலும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 7:20 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 06405 ரயிலானது 15ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை 7 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. காலை 8:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06674 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2:30 மணிக்கு வாஞ்சிமணியாச்சிக்கு புறப்படுச் செல்லும் வண்டி எண் 06680 ரயில் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாலை 4:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06676 ரயிலானது 14ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. மாலை 6:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06678 ரயிலானது 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 10 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருச்செந்தூரிலிருந்து பழனி இடையேயான பயணிகள் ரயில்கள் வண்டி எண் 16732 மற்றும் 16731 ஆகியன 11ஆம் தேதியன்று திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 9 நாட்கள் திருச்செந்தூர் மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதியம் 2:01 மணிக்கு வாஞ்சி மணியாச்சியிலிருந்து பழனி செல்கிறது என தென்னக இரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் தினந்தோறும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் நாசரேத் ரயில் நிலையங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் என சுமார் 500ற்கும் அதிகமானோர் திருச்செந்தூர் வந்து செல்ல பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ரயில்களை ரத்து செய்யப்படுவதால் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட தென்னக இரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கோட்டை செல்லும் ரயில்கள் சேரன்மகாதேவி ரயில் நிலையத்திலிருந்தும், தூத்துக்குடி மற்றும் பழனி செல்லும் ரயில்களை வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படுவது போல திருச்செந்தூர் செல்லும் ரயில்களை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story