வெத்தியார்வெட்டு பகுதியில் வங்கி அமைக்க கோரிக்கை

வெத்தியார்வெட்டு பகுதியில்  வங்கி அமைக்க கோரிக்கை
முன்னாள் ஆட்சியர்
ஜெயங்கொண்டம் அருகே  வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு வங்கி,  ஏடிஎம் மற்றும் காவல் நிலையம் வேண்டும் என முன்னாள் கலெக்டர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வெத்தியார்வெட்டு அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் பண முடிப்பு வழங்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது .

இதில் வெத்தியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பரிசு, கேடயம் மற்றும் பண முடிப்புகள் வழங்கி பாராட்டி பேசினார்.

பின்னர் .முன்னாள் கலெக்டர் ரத்தினசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். ஐஏஎஸ் ல தலைமை செயலாளர் பதவி தான் உயர்ந்த பதவி அந்த அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன் மாணவர்கள் நன்றாக படித்து மேன்மை அடைய வேண்டும் பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் அவர்கள் படிக்கின்றார்களா ? என்பது குறித்து ஆசிரியரிடம் கேட்டறிய வேண்டும், .மேலும் ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கலந்தாலோசிக்க வேண்டும்,

இந்த வெத்தியார்வெட்டு கிராமத்தில் அடிப்படை வசதிகளான அனைத்து வசதிகளையும் கேட்டு பெற்றுள்ளோம் எங்களது கிராமத்திற்கு ஒரு வங்கி மற்றும் ஏடிஎம் மையம் போலீஸ் நிலையம் மட்டும்தான் தேவையாக உள்ளது. தற்போதைக்கு எங்கள் கிராமத்திற்கு இதுதான் குறையாக உள்ளது அரசுக்கு எங்களது கோரிக்கை குறித்து மனு அளித்துள்ளோம் நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்தில் பள்ளிக்கு வருவதே சாப்பிடுவதற்காகத்தான்,

பள்ளிக்கு வருவோம் அப்போதெல்லாம் பேருந்து வசதி கிடையாது நடந்தே செல்ல வேண்டிய சூழல் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் படித்து முன்னேறி கலெக்டராக உயர்ந்தேன்.எனவே என்னைப் போன்று மாணவர்களும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும்,

மேலும் வெத்தியார்வெட்டு கிராம மக்களும் முன்னேற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என அவர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story