கோவை வனப்பகுதியை யொட்டி யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை
பைல் படம்
தாயை பிரியும் யானை குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்காமல் வளர்த்து வனத்தில் விடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தாயை பிரிந்த குட்டிகளை வேறு யானைக் கூட்டம் சேர்த்துக் கொள்ள 5% மட்டுமே வாய்ப்புள்ளதாக விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் மனு அளித்துள்ளார். வன விலங்குகளுக்கு சிகிச்சை வழங்க சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோவை வனப்பகுதியை ஒட்டி யானைகள் மறுவாழ்வு மையம், தொழில்நுட்ப நகரம் அமைக்க தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story