சட்டங்களை சமஸ்கிருத பெயரில் மாற்றுவதை எதிர்த்து தீர்மானம் - சிந்தனைச் செல்வன்
சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ
சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடர்ந்து விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் மாற்றி சமஸ்கிருதத்தில் பெயரிட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது.
இந்த சட்டங்கள் அரசியலமைப்பு சாசனம் அட்டவணை 7-ன் கீழ் ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக நீதிமன்றத்தின் அதிகாரங்களையும் பறித்து முழுக்க முழுக்க காவல் துறை ராஜ்ஜியமாக மாற்றக்கூடிய அபாயம் உள்ளது. மாநில அரசை கேட்காமல் மாநில அரசின் மீது சட்டத்தை திணித்து இருப்பதை விசிக கண்டிக்கிறது. இதை திரும்ப பெற வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை விசிக சார்பில் இந்த சட்டமன்றத்தில் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இந்த கூட்டத்தில் கொண்டுவரப்படவில்லை. சிறப்பு சட்டப்பேரவை அமர்வை கூட்டி இதற்கு எதிராக தனி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.