தமிழக கோவில் அறங்காவலர் நியமனம் : உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக கோவில் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக கோவில்களி்ல் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது? என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உள்ளது.
வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை, 20 ஆயிரம் கோவில்களில் அறங்காவலர்கள் பதவிக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை என்று அறநிலையத் துறை தெரிவித்தது. தக்கார்கள் நியமனம் தொடர்பாக தகுதியை நிர்ணயித்து விதிகளை வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Next Story