மீண்டும் ஒன்றிணைந்த மு க ஸ்டாலினும், அழகிரியும்!

மீண்டும் ஒன்றிணைந்த மு க ஸ்டாலினும், அழகிரியும்!

மு க ஸ்டாலினும், அழகிரி

மகனை நினைத்த கவலையில் அழகிரி... அண்ணனுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்..!

மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் இருந்த மு.க.அழகிரி கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டார்.

தந்தை இறப்பின் போது கூட மு க ஸ்டாலினும், அழகிரியும் பேசாமல் இருந்தனர்.

இதனிடையே திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். 2014 திமுக தலைமை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டது முதல் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

மு.க.ஸ்டாலினையும் மு.க.அழகிரியையும் ஒன்றிணைக்க குடும்ப உறுப்பினர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராக பதவியேற்றபோது தனது வாழ்த்துகளை அழகிரி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற விழாவுக்கு அழகிரி மகன் துரை தயாநிதியையும், மகள் கயல்விழியையும் அழகிரி அனுப்பி வைத்தார்.

அதேபோன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஜல்லிக்கட்டு திறப்பு விழாவிற்கு மதுரை சென்ற உதயநிதி, அழகிரி மற்றும் காந்திமதி ஆகியோரிடம் ஆசி பெற்றார். இந்த நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் கடந்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதனையடுத்து நேற்று மீண்டும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மகன் துரை தயாநிதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது மு க ஸ்டாலினும் அழகிரியும் நீண்ட நேரம் பேசியதாக தெரிகிறது. சுமார் 20 நிமிடகளுக்கு மேல் அவர் மருத்துவமனையில் இருந்ததாகவும், அவரது அண்ணன் அழகிரியிடம் துரை தயாநிதி உடல்நலம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

Tags

Next Story