வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

பைல் படம் 

தமிழகம் முழுவதும் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வருவாய் அலுவலர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கான ஆணைகள் வழங்க தாமதம் ஏற்படுவதால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்று அலுவலர்களின் பணி பாதுகாப்பு, வருவாய் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முறையே இளநிலை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்வது, வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு இல்லாத காரணத்தினால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார். 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் இதனால் பாதிக்கும்.

Tags

Next Story