ஆர்.எம்.வீரப்பன் மறைவு : டிடிவி தினகரன் இரங்கல்

விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட ஆர்.எம்.வீரப்பனை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டி டி வி தினகரன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story