சோளிங்கரில் பெண்மணியை மண்வெட்டியால் தாக்கிய நபரை கைது செய்ய கோரி சாலை மறியல்

சோளிங்கரில் பெண்மணியை மண்வெட்டியால் தாக்கிய நபரை கைது  செய்ய கோரி சாலை மறியல்

பாதிக்கப்பட்ட பெண்

சோளிங்கரில் பெண்மணியை மண்வெட்டியால் தாக்கிய நபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
சோளிங்கரில் பெண்மணியை மண்வெட்டியால் தாக்கிய நபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்த பாஸ்கர் இவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வி அவர் வளர்த்து வரும் கால்நடையை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றதாக தெறிக்கிறது. அப்போது விவசாய நிலத்தின் வழியாக செல்லக்கூடாது என பாஸ்கர் செல்வியை தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாஸ்கர் கையில் வைத்திருந்த மண்வெட்டியை கொண்டு செல்வியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மயங்கி கிழு வீழ்ந்து உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலத்த காயம் என்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இதுவரை பாஸ்கரை கைது செய்யவில்லை எனக் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அண்ணா சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அரை மணி நேர சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. பாஸ்கரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலிசார் தெரிவித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர். பாஸ்கர் இது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவது வழக்கமாக உள்ளதால் கோயில் நிர்வாகம் உடனடியாக குத்தகத்தை நிலத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story