மாற்றுத்திறனாளிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு சேலத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஊர்வலத்தை வக்கீல் செல்வகீதன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் அருள்விக்னேஷ், சண்முகசுந்தரம், பாரதி உரிமைகள் அறக்கட்டளை நிர்வாகி பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகில் தொடங்கி 4 ரோடு, புதிய பஸ்நிலையம் வரை சென்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜரத்தினம், மாவட்ட தலைவர் குமரேசன், துணைத்தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story