சேலத்தில் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன்’

சேலத்தில் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன்’

ரோபோடிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் ‘ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரி மற்றும் ஐ.சி.டி அகாடமி இணைந்து யுஐபாத் அகாடமிக் அலையன்ஸ் ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷன் தொடக்கவிழாவை நடத்தியது. தலைமை ஆசிரியர் அன்புச்செழியன் வரவேற்றார். கணினி அறிவியில் துறை தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

யுஐபாத் அகாடமிக் அலையன்ஸ் இயக்குனர் ராஜேஷ் ராஜகோபாலன் நம்பியார், இணை துணைத்தலைவர் சரவணன், ஐ.சி.டி. அகாடமி மாநில தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் நோக்கமானது, கூட்டு முயற்சியை அறிமுகப்படுத்தி தொடங்குவது, ரோபோடிக் செயல்முறை ஆட்டோ மேஷன் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது மற்றும் கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் மாணவர்களிடையே நெட்ஒர்க்கிங், அறிவு பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குவது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக அன்னபூரணா பொறியியல் கல்லூரியும், யுஐபாத் அகாடமிக் அலையன்ஸ் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முடிவில், கணினி அறிவியில் துறை உதவி பேராசிரியை சுஜிதா நன்றி கூறினார்.

Tags

Next Story