ராக்கெட் தளம் பணிகள் விரைவில் முடியும் : இஸ்ரோ தலைவர் நம்பிக்கை
இஸ்ரோ தலைவர்
குலசேகரன்பட்டினத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ராக்கெட் தளம் பணிகள் விரைவில் முடியும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துவிட்டது.
2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன் பட்டினம் உள்ளது. இங்கிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது.
ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றார்.
Tags
Next Story