தமிழகத்தில் 6 இடங்களில் ரோப்கார் திட்டம் - அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் 6 இடங்களில் ரோப்கார் திட்டம்  - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு 

தமிழகத்தில் 6 இடங்களில் ரோப்கார் திட்ட செயல்படுத்த சாத்திய கூறுகள் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலும் ஆறு இடங்களில் சாமி தரிசனம் செய்ய ரோப்கார் அமைக்க சாத்திய கூறு உள்ளதாகவும் இரு இடங்களில் ரோப்கார் அமைக்க 27 கோடி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி துவங்க உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ள ரோப்கார் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரோப் கார் வெள்ளோட்டத்தில் பயணம் செய்து மலை மேல் உள்ள லட்சுமி நரசிம்மரை சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, லட்சுமி நரசிம்மர் கோவில் இன்றைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 20 கோடி மதிப்பீட்டில் விமான நிலையத்தில் உள்ள அமைப்புகளை போன்று மின் தூக்கி வசதி உட்கட்டமைப்பு வசதிகள் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் குறைகள் உள்ளது அதனை முழுமையாக முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் ரோப்கார் பணி விரைவில் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இக்கோவிலில் அரசியல் ஆதாயத்திற்காக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பழனிச்சாமி பணிகள் முடிக்கப்படாமலேயே திறந்து வைத்து கல்வெட்டு வைத்தனர் என விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மேலும் ஆறு திருக்கோவில்களில் ரோப்கார் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதாக ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டு இடங்களில் ரோப்கார் பணி துவங்க 27 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கி இருப்பதாகவும் விரைவில் அப்பணி துவங்கும் என தெரிவித்தார். திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் எப்போது நினைத்தாலும் இறைதரிசனத்தை மேற்கொள்ளலாம். ஆனால் அரசியலுக்காக துறையின் மீதும் அரசின் மீதும் எந்தவித குற்றசங்களை சுமத்த முடியாத காரணத்தால் இது போன்று சிறு சிறு பிரச்சனைகளை கூட ஊடகங்களில் பேசி பெரிதாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையினுடைய கருத்துக்கு பதில் அளித்தார்.

Tags

Next Story