கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா பூக்கள்

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் 1500 மேற்பட்ட வகையிலான ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது, இந்த பூங்கா சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ரோஜா பூங்காவில் 15,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

, இந்நிலையில் இங்கி மே,ஜீன் மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம், இதனையடுத்து சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவ்வாத்து பணியும்,செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மருந்துகள் செலுத்தும் பணியும் நிறைவடைந்தது, இதனைதொடர்ந்து தற்போது ரோஜா பூங்காவில் 1500 வகையில் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன, குறிப்பாக சன் கோல்டு,சம்மர் டிரீம்,பிரின்சஸ், பெர்ப்யூம்,டிலைட்,ஈபிள் டவர்,கிலோட் கிஸ் அப் பையர் உள்ளிட்ட ரோஜா மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கிறது.

இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களையும்,ரோஜா மலர்களுக்கு முன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் இந்த ரோஜா மலர்களை பார்க்கும் போது புத்துணர்ச்சியாக இருப்பதாகவும், கொடைக்கானல் குளுமையாக இருப்பதாகவும் குடும்பத்துடன் மகிழ்ந்து செல்வதாகவும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story