மதம் மாறினால் ரூ.10 கோடி மோசடி : மேலும் ஒருவர் கைது

மதம் மாறினால் ரூ.10 கோடி  மோசடி : மேலும் ஒருவர் கைது
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மதம் மாறினால் ரூபாய் 10 கோடி பணம் தருவதாக கூறி சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மதம் மாறினால் ரூபாய் 10 கோடி பணம் தருவதாக கூறி சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர் அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களை கூறி மேற்படி இளைஞரிடம் ரூபாய் 4,88,159/- பணத்தை மோசடி செய்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவரை கடந்த (26.04.2024) அன்று கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் பண மோசடியில் ஈடுபட்ட மற்றொரு எதிரியான கர்நாடகா மாநிலம், பெங்களுர் சிங்க சந்தரா பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கணேசன் (31) என்பவரை நேற்று (01.05.2024) சிங்க சந்தரா பகுதியில் வைத்து கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (02.05.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story