ரூ.15 கோடி மதிப்பிலான ரேஷன் அரிசி, கோதுமை மழையில் சேதம்
தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகத்தில் தென் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 6500 டன் அரிசி மற்றும் கோதுமை மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகம் அமைந்துள்ளது இங்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு நியாயவிலை கடைகளுக்கு லாரிகள் முலம் அனுப்பக்கூடிய ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவை ஆயிரக்கணக்கான டன்களில் 10க்கும் மேற்பட்ட குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் கடந்த 17 ,18 தேதிகளில் பெய்த கனமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக உணவுக் கழகத்தில் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளது இதில் சுமார் 15 கோடி மதிப்பிலான சுமார் 6000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை ஆகியவை சேதமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story