அப்பல்லோவில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆர்டிஎன் சிகிச்சை வெற்றி
அப்பல்லோ மருத்துவமனை
சென்னையில் தனியார் மருத்துவமனை (அப்போலோ மருத்துவமனை), உடலில் சிறுநீரகம் இடம் மாறி அமைந்திருக்கும் ஒரே புறத்தில் இரண்டு சிறுநீரகமும் இருக்கும் நோயாளிக்கு உலகிலேயே முதன்முறையாக சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் ரீனல் டெனெர்வேஷன் (ஆர்டிஎன்) என்று சொல்ல கூடிய உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதை குறைப்பதற்கான சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து, சென்னை அப்போலோ மருத்துவமனை இன்டர்நேஷனல் கார்டியாலஜி பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரெஃபாய் சௌகத் அலி, நோயாளிக்கு மற்ற மருத்துவ முறைகள் பயனளிக்காத கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு உள்ளனர். 58 வயதான இந்த நோயாளிக்கு இடது பக்கம் இருக்க வேண்டிய சிறுநீரகம் வலது பக்கம் இலியாக் ஃபோஷாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் உடற்கூறிய மாறுபாடு இது, அதிநவீன ஆர்டிஎன் சிகிச்சை மூலம் இரண்டு சிறுநீரக தனிமங்களில் கதிரியக்க அதிர்வெண்களின் மூலம் அவற்றின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். இதனால் அந்நோயாளி அடுத்த நாளே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த சிகிச்சை பிறகு இரண்டு நாட்கள் மட்டும் வலிகள் இருந்தன ஆனால் அதன் பிறகு அது சரியாகி விட்டன என சிகிச்சை பெற்ற நோயாளி தெரிவித்தார். ஓவியங்கள் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்த ஓவியங்கள் வைக்கப்பட உள்ளது, அதில் சென்னையில் ஆழ்வார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை ஒன்று.