110 விதி - தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாபு முருகவேல் மனு

110 விதி - தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாபு முருகவேல் மனு

பாபு முருகவேல்

உள்நோக்கத்தோடு, தேவையில்லாமல் அதிமுக நிர்வாகிகளை அழைத்து குற்றவியல் நடைமுறை சட்டம் விதி 110க்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என பாபு முருகவேல் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ,ஆர். எம். பாபு முருகவேல் தலைமை தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர். எம். பாபு முருகவேல் தலைமை தேர்தல் அலுவலரிடம் அளித்த மனுவில்,

எந்த ஒரு தேர்தலின் போதும் தமிழகத்தில் இருக்கிற அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 110 கீழ் அந்த காவல் நிலையத்தில் பதிவாகி இருக்கிற குற்ற பதிவேடு குற்றவாளிகளையும், இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று நினைக்கிற நபர்களையும், அந்த காவல் நிலைய அதிகாரி அவர்களை நேரில் அழைத்து, தேர்தல் முடிகிற வரை எந்தவிதமான குற்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என்றும், சட்டம் & ஒழுங்கு சீர்கேடுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்து முடிப்பதற்கு நான் ஒத்துழைப்பு தருவேன் என்றும் ஒரு பிரமாண பத்திரம் எழுதி வாங்குவது சட்ட நடைமுறை.

இந்த நடைமுறை ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போதும் வழக்கமாக காவல்துறையினரால் பின்பற்றப்படக்கூடியது தான் ஆனால், இந்த தேர்தலில் அஇஅதிமுக நிர்வாகிகளையும், தேர்தலில் தீவிரமாக களப்பணி ஆற்றுகிற நிர்வாகிகளையும் சாதாரண வாய் சண்டைக்கான குற்ற வழக்குகள் இருக்கக்கூடியவர்களையும் அந்த காவல் நிலைய அதிகாரிகள் மீது அரசியல் காரணங்களுக்காக களமாடக்கூடிய அஇஅதிமுக நிர்வாகிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்றும், ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் காத்திருக்க வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும், தேவையில்லாமல் அவர்களை அழைத்து குற்றவியல் நடைமுறை சட்டம் விதி 110க்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று துன்புறுத்துகிறார்கள்.

இது மாநிலம் முழுவதும் ஏதோ அரசியல் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் செயலாக நாங்கள் கருதுகிறோம் அதே நேரத்தில் திமுக நிர்வாகிகளின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கடும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது ஆனால் அவர்களின் மீது எந்த விதமான அழைப்பானையும், குற்றவியல் நடைமுறை சட்டம் 110க்கு எந்த விதமான பிரமாண பத்திரமும் வாங்கியதாக தகவல் இல்லை. எனவே இந்த விஷயத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துகிற இந்த செயலை அனைத்து காவல் உயர் அதிகாரிகளும், காவல் ஆணையாளர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரியப்படுத்த வேண்டும் என்றும், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள திமுகவினருடைய விவரங்களையும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து அதிமுக செய்தி தொடர்பாளரும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான, ஆர். எம். பாபு முருகவேல், தரப்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது அதை முழுவதுமாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவளித்திருக்கிறார்.

Tags

Next Story