தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் குறித்து திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (18.03.2024) நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திரளான விடுதி உரிமையாளர்கள்,திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலெட்சுமி பேசுகையில்,

தேர்தல் தொடர்பாக போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை அனுமதி பெற்றுதான் அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். வன்முறையை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையோ போஸ்டர்களையோ அச்சிடக் கூடாது. திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கு புக்கிங் செய்தால் திருமண மண்ட உரிமையாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் முன் அனுமதி கடிதம் வழங்க வேண்டும். மண்டபங்களில் உணவு வழங்கக்கூடாது. பரிசு பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது.

தங்கும் விடுதிகளில் வெளி மாநில மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்படும் போது அவர்களின் முழு விவரங்களை காவல்துறை மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பணப்பரிமாற்றம் விடுதிகளில் நடக்காத வகையில் கண்காணிக்கப்பட வேண்டும்.கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் தேர்தல் அதிகாரியின் அனுமதியின்றி எக்காரணம் கொண்டும் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது.தேர்தல் விதிகளுக்குட்பட்டு விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என கூறினார்.

Tags

Next Story