ரஷ்ய கல்வி கண்காட்சி
மா சுப்ரமணியன்
ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் நடத்தும் 2024-கிற்கான ரஷ்ய கல்வி கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் கல்வி ஆலோசகர்கள் நடத்தும் 2024-கிற்கான ரஷ்ய கல்வி கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த கல்வி கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் அதிகாரி ஒலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், பயோடெக்னாலஜி துறை தேசிய ஆராய்ச்சி அணு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எலெனா சரபுல்ட்சேவா, Propaedeutics துறையின் இணைப் பேராசிரியர் விக்டோரியா நௌமோவா, பொது நோயியல் துறை, மருத்துவ சொற்களஞ்சியத்தின் இணை பேராசிரியர் திமூர் அக்மெடோவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story