சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலை உடைத்து கொள்ளை

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலை உடைத்து கொள்ளை

திருடப்பட்ட கோவில்

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலை உடைத்து கொள்ளையடிக்கப்படுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த திருக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல பூசாரி இரவு பூஜை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு, கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது கோவில் முழுவதும் சுற்றி வந்தது. முதற்கட்ட விசாரணையில் பணம் நகை எதுவும் கொள்ளை போகவில்லை என தெரிந்தது. இ

ருந்தபோதிலும் மர்ம நபர்கள் எதற்காக கோவிலின் உண்டியலை உடைத்தார்கள் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story