சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு: அம்மன் திருவீதி உலா

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு: அம்மன் திருவீதி உலா

அம்மன் திருவீதி உலா

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் மண்டல பூஜை நடந்து வந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், ஊர் மக்களின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும் கோவில் வளாகத்தில் கடந்த 6-ந் தேதி நவசண்டி யாகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கும்பாபிஷேக மண்டல பூஜை 48-வது நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று காலை 6.15 மணிக்கு விநாயகர் வழிபாடு, நவாவரண பூஜை, சப்தசதி பாராயணம் ஹோமம், 13 அத்தியாய ஹோமம், பட்டு புடவை மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சிறப்பு மண்டல பூஜையும், புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சிவராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story