சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,702 அடியாக அதிகரித்துள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும், நீர் இருப்பும் உயர்ந்து வருகிறது .நேற்று நீர்வரத்து வினாடிக்கு 2,238 கன அடியிலிருந்து இன்று 2,702 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.53 அடியில் இருந்து 53.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 20.28 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story