குண்டவெளியில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா

குண்டவெளியில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா
மாரியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்
ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளியில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த 15- ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்துசாமி வீதியுலா நிகழ்ச்சியும்,அதை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 9-ம் நாள் திருவிழாவான வீதியுலாவில் செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர் காத்தவராயன் மற்றும் பரிவர தெய்வங்கள் வீதியுலாவாக குண்டவெளி கன்னிக்கோவில் வழியாக மீன்சுருட்டி வடக்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு முக்கிய வீதிகள் வழியாக செல்லியம்மன் கோவிலை மீண்டும் வந்து அடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.நேற்று பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு காவடி, அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது.விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மணிவண்ணன் செய்து இருந்தார்.

Tags

Next Story