அதிமுக தொண்டரிடம் பேசிய சசிகலா!

அதிமுக தொண்டரிடம்  பேசிய சசிகலா!
தூத்துக்குடி அதிமுக தோற்றதால் மனமுடைந்து தனது காலில் கிழித்துக்கொண்ட அதிமுக தொண்டர் செல்வகுமாரிடம் சசிகலா தொலைபேசியில் பேசினார்.

தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் என்பவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை தொடர்ந்து மணமுடைந்த நிலையில் திமுக தொண்டரிடம் அதிமுக வெற்றி பெறும் இல்லையென்றால் என் ரத்தத்தை அதிமுகவிற்காக அளிப்பேன் என்ற பந்தயம் எதிரொலியாக தனது குதிங்கால் பகுதியில் கத்தியால் கிழித்து ரத்தத்தை கான்பித்துள்ளார் இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இவ்வாறு அதிமுக தோற்றதால் மனம் உடைந்து தனது காலை கிழித்துக்கொண்ட அதிமுக தொண்டரிடம் சசிகலா இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார் உங்களுக்கு குடும்பம் உள்ளது இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது உடம்பை பார்த்துக் கொள்ளவும் அதிமுகவை நான் பார்த்துக் கொள்கிறேன் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என உறுதி கூறினார் சசிகலா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அதிமுக தொண்டர் செல்வகுமார் கட்சி ஒன்றிணைந்து 2026 இல் ஆட்சி அமைக்கும் என சின்னம்மா கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்

Tags

Read MoreRead Less
Next Story