சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்!

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்ட  சவுக்கு சங்கர்!

 சவுக்கு சங்கர் 

கோவை மத்திய சிறையில் உள்ள யூ டியுபர் சவுக்கு சங்கரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்று நீதிமன்றம் சிகிச்சைக்காக உத்தரவை நேற்று பிறப்பித்தது.

இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த சவுக்கு சங்கருக்கு வீல் சேரில் அமர்ந்து அழைத்துச் செல்ல செவிலியர்கள் அறிவுறுத்திய போது நான் நடந்து வருகிறேன் என தெரிவித்துக் கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றார். வலது கையில் முறிவு ஏற்பட்டதா?? எந்த மாதிரி காயம் உள்ளது ?? என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது. இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story