SBI ரிவார்டு பாயிண்ட்ஸ் மோசடி: 2 மாதத்தில் 73 வழக்குகள்...

SBI ரிவார்டு பாயிண்ட்ஸ் மோசடி: 2 மாதத்தில் 73 வழக்குகள்...

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு SBI ரிவார்டு பாயிண்ட்ஸ் மோசடி குறித்த பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ் மோசடி காரணமாக 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகள் எப்படி நடக்கிறது? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

வெளியான அறிவிப்பின்படி ஹேக்கர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் வாட்ஸ்அப் அக்கவுண்டுகளை ஹேக் செய்து SBI ரிவார்ட் பாயிண்ட்டுகள் தருவதாகக் கூறி போலியான மெசேஜ்களை அனுப்புகின்றனர். மேலும் இதுபோன்ற நேரங்களில் மோசடிக்காரர்கள் குரூப்புகளின் ஐகான் மற்றும் பெயர்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்று மாற்றிக் கொண்டே மெசேஜ் அனுப்புகின்றனர். இவ்வகை மோசடிகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டல் மூலம் தமிழகத்தில் நடந்த இந்த மோசடி குறித்த தகவல்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சஞ்சய் குமார் என்ற போலிஸ் அதிகாரி கூறுகையில், மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்படுபவர்களின் மொபைல் ஃபோனை ஹேக் செய்கின்றனர். அதன்பிறகு அவர்களுடைய வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளையும் ஹேக் செய்ய தொடங்குகின்றனர் என்று கூறியுள்ளார். மோசடிக்காரர்கள் அனுப்பும் மெசேஜில் வங்கி விவரங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு SBI ரிவார்ட் பாய்ண்டுகள் கிடைக்கும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பயனர்களுக்கு ஒரு அவசர உணர்வை ஏற்படுத்துகிறது.

இதனால் அவர்களும் எங்கே நம்முடைய பேங்க் அக்கவுண்ட் செயலிழந்து விடுமோ? அவர்கள் கொடுக்கும் ரிவார்ட் பாய்ண்டுகள் கிடைக்காமல் போய்விடுமோ?

என்ற பயத்தில் அவர்கள் கேட்கும் விவரங்களை கொடுத்து அப்டேட் செய்ய முயற்சிக்கின்றனர். பயனர்களுக்கு மோசடிக்காரர்களால் அனுப்பப்படும் மெசேஜில் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்யும் போது ஒரு APK ஃபைலை டவுன்லோட் செய்ய வேண்டியுள்ளது.

இதில் SBI ரிவார்ட் பாயிண்ட்டுகள் தொடர்பான போலியான விவரங்களை டிஸ்ப்ளேவில் காண்பிக்கின்றனர். இங்கு தான் ட்விஸ்ட் இருக்கிறது. இந்த APK ஃபைல் தான் உங்களுடைய மொபைல் ஃபோனில் இருந்து, நீங்கள் நெட் பேங்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள், OTP-கள் போன்ற விவரங்களை சேமித்து மோசடிக்காரர்களுக்கு அனுப்புகிறது.

மோசடியைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்:

பாதுகாப்பை மேம்படுத்தவும்: பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளுக்கு ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம்.

அக்கவுண்ட்டை லாகின் செய்து உள் நுழையும்போதோ அல்லது ஒரு புது அக்கவுண்ட் திறக்கும்போது அனுப்பப்படும் OTP எவ்வளவு பாதுகாப்பானதோ அதேபோல இன்னொரு பாஸ்வேர்டை பயன்படுத்துவதும் முக்கியம்.

நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்:

எந்த ஒரு வங்கி அதிகாரிகளும் உங்களிடம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து தகவல்களை பெற மாட்டார்கள். இதுதான் அடிப்படையான விஷயம்.

இதை தெரிந்து கொண்டு, இது போன்ற நேரங்களில் சிந்தித்து செயல்படுங்கள். நம்பகத்தன்மை குறித்த விவரங்களை இணையத்தில் தேடுங்கள்.

உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் குடும்பத்தாருடனோ கலந்து பேசி அவர்களுக்கும் இதே போல மெசேஜ் வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வங்கிகள் சில முக்கியமான அறிவிப்புகள் என்றால் மட்டுமே உங்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்.

வங்கி தகவல்களை புதுப்பிக்க வேண்டுமானால் கண்டிப்பாக வங்கியை தான் அணுக வேண்டும்.

இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வோடு இருந்தாலே வெகுவாக, இவற்றை குறைக்க முடியும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.

Tags

Next Story