பாஜக பிரச்சாரத்தில் பள்ளி குழந்தைகள் - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கோவையில் பள்ளி குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அட்டவணை கடந்த 16 ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி, பிரதமர் மோடி, கோவை நகரத்தில் தெருத்தெருவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வுக்கு பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜகவினர் மீதும், மோடியின் மீதும் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திறகு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல் பிரதியை இத்துடன் இணைத்துள்ளோம். அதனை தங்கள் ஊடகம் வழியாக வெளியிட்டு உதவ வேண்டுகிறோம். மாநிலத் துணைச் செயலாளர் நா. பெரியசாமி அறிக்கை.

Tags

Next Story