ஏப்.2 முதல் பள்ளி இறுதி தேர்வுகள்

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு 2023 24 ஆம் கல்வியாண்டிற்கு ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், கோடை விடுமுறை ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் விடப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி ஆசிரியர்களுக்கு 18-வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்துதல் , தேர்வு முடிவுகள் வெளியிடுதல் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story